×

நெல்லையில் நின்ற பைக்கிற்கு கன்னியாகுமரியில் “சீட் பெல்ட்” இல்லை என அபராதம்: அதிர்ச்சியில் கட்டுமான தொழிலாளி

நாகர்கோவில், பிப்.12:  நெல்லையில் நின்ற பைக்கிற்கு சீட் பெல்ட் இல்லை என கன்னியாகுமரி  போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். விதிமீறல்  வாகன ஓட்டிகளுக்கு முன்பு ஸ்பாட்பைன் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இதனை  ஆய்வாளர் விதிக்க முடியும். மேலும் சிலரிடம் அபராதம் கட்ட பணம் இருக்காது  என்பதால், நீதிமன்றம் சென்று அபராதம் கட்ட வேண்டும். இந்நிலையில், தற்போது  இசெலான் டிவைஸ் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் வாகன எண்  பதிவு செய்த உடன் வாகனம் குறித்த அனைத்து விபரங்களும் வந்து விடும்.  அதன்பின் ஏடிஎம் கார்டு மூலமாகவோ அல்லது வங்கியில் சென்றோ அபராதம்  செலுத்தலாம். ஆனால், தற்போது இதில் சம்பந்தமே இல்லாதவர்களும்  பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த சில நாட்கள் முன்பு சுசீந்திரம்  பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி செந்தில் மணிகண்டன்  மேலப்பாளையத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் நின்றபோது,  அவரது பைக் எண்ணை குறிப்பிட்டு, சீட் பெல்ட் அணியவில்லை என   செல்போனிற்கு  கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் 800 அபராதம் விதித்துள்ளதாக  குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனையடுத்து, அவர் அபராதம்  விதிக்கப்பட்ட நேரத்தில் தனது பைக் நெல்லை மேலப்பாளையத்தில் நின்றது  என்பதற்கான கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் குறிப்பிட்ட எண்ணில் உள்ளது  பைக், கார் அல்ல. ஆனால், சீல்ட் பெல்ட் என வந்துள்ளதாக தகவல்  தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு சரியான பதிலை போலீசார் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து  இலவச சட்ட உதவிமையத்தின் உதவியை செந்தில் மணிகண்டன் நாடியுள்ளார். அவர்கள்  முதல்வர் தனிப்பிரிவு, எஸ்.பி., அலுவலகதிற்கு புகார் தெரிவிக்க  அறிவுறுத்தியுள்ளனர். இதுபற்றி காவல்துறை அதிகாரிகளிடம்  கேட்டபோது, பொதுவாக வாகனங்களின் ஆவணங்களை பார்த்து வழக்கு பதிந்தால்  இதுபோன்று தவறு நேராது. ஆனால், வாகனங்கள் நிற்காமல் செல்லும்போது, அதன்  எண்ணை குறித்து வழக்கு பதிவு செய்யும்போது, இதுபோன்ற தவறுகள் ஏற்பட்டு  விடுகின்றன.

ஹெல்மெட் அணியாவிட்டால், 100 மட்டுமே  அபராதம். ஆனால், நிற்காமல் சென்றால், போலீசாரின் உத்தரவை மீறியதாக ரூ.500ம்  அத்துடன் அதிவேகம், ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாதது போன்ற  பிரிவுகளுக்கும் சேர்த்து கூடுதல் அபராதம் செலுத்த நேரிடும். மேலும் வேகமாக  செல்லும் போது, விபத்து ஏற்பட்டு வாகனத்தில் செல்பவர்களுக்கும், அவ்வழியாக  செல்பவர்களும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள்  நின்று ஆவணங்களை காட்டி செல்வது அவர்களுக்கு நல்லது என்றனர்.

'அனாதையாக நின்ற பைக்'
கடந்த  சில நாட்கள் முன்பு கோட்டாறு இருசக்கர பட்ரோல் போலீசார் நள்ளிரவு ரோந்து சென்றனர். அப்போது   மணியடிச்சான் கோயில் பகுதியில் டாஸ்மாக் அருகே புதிய இருசக்கர  வாகனம் சைடு லாக் கூட போடாமல் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. இதனை  பார்த்த போலீசார் இ செலான் டிவைஸ் மூலம் வாகன உரிமையாளரின் செல்போனிற்கு  தொடர்பு கொண்ட போது, ெபண் ஒருவர் போனை எடுத்துள்ளார். அப்போது குறிப்பிட்ட  வாகனம் தன்னுடையது எனவும், கணவர் வெளியே எடுத்து சென்றபோது போதையில் தவறி  வைத்து விட்டதாக  கூறி வாகனம் எங்கு நிற்கிறது எனக்கேட்டுள்ளார்.   இதனையடுத்து போலீசார் வாகனம் நிற்கும் பகுதியை கூறி எடுத்து செல்ல  கூறியுள்ளனர். இ செலான் டிவைஸ் அபாரதம் மட்டுமின்றி இதுபோலவும் “கை” கொடுக்கிறது.

Tags : Construction worker ,Kanyakumari ,Nellai ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...