×

சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி தபாலில் பிரதமருக்கு அனுப்பிய விறகு கட்டை

கோவை: நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மீண்டும் விற்கு அடுப்பை நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை சுட்டிக்காட்டும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் விறகு கட்டைகளை தபால் மூலம் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தனர். நாடு முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாட்டை சரிசெய்யவும், மக்களுக்கு தடையின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும், ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு வழங்கவும், சிலிண்டர் விலை உயர்வுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் மனு அனுப்பி வைத்தனர்.

Tags : Firewood ,Coimbatore ,Indian Democratic Youth… ,
× RELATED இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்