×

உனக்கு விழுற அடியில இனி யாருமே வரக்கூடாது: தளபதி அல்ல… தலைவலி… விஜய்யை விளாசி தள்ளிய சாட்டை துரைமுருகன்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நாம் தமிழர் கட்சி கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியதாவது: தன்னை பார்க்க வந்த, ரசிக்க வந்த 41 பேரை களத்தில் சாவு கொடுத்து ஓடி போன ஒரு கோழை விஜய். நான் அடிச்சா தாங்க மாட்ட. நாலு மாசம் தூங்க மாட்ட. வீடு போய் சேர மாட்ட என சினிமாவில் வசனம் பேசுகிறார். கில்லி படத்தில் ஓடுவது எப்படி என்று பிராக்டிஸ் எடுத்துள்ளார். 41 பேர் சாகும்போது எங்கள் தலைவர் சீமான் மட்டும் தலைவனாக இருந்தால் என் உயிரேபோனாலும் அந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என நகராமல் களத்தில் நின்று இருப்பார். முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி அந்த இடத்தில் போய் நின்றார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன்.

எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என நாங்களும் அந்த இடத்தில் போய் நின்றோம். மக்களை பலி கொடுத்து விட்டு ஓடிய கோழையை தளபதி என்று கூறுகிறான். நீ எந்தப் படைக்கு தளபதி, முத்துராமலிங்க தேவர் படைக்கு தளபதியா? மருதுபாண்டிக்கு தளபதியா? காமராஜர் படைக்கு தளபதியா? நீ யாருக்குடா தளபதி நீ தலைவலி. அண்ணன் சீர் திட்டத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பவுன் நகை, ஒரு காஞ்சிபுரம் பட்டு புடவை வழங்க போறாராம். இவர் எடப்பாடியை பார்த்து பயப்படுகிறாரா? சிபிஐயை பார்த்து பயப்படுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் சாட்டை, இடும்பாவனம் கார்த்தி ஆகிய 2 பெயரை கேட்டால் விஜய் பயப்படுவார். சினிமாவில் நடித்தால் நாடாள முடியும் என இனி எவரும் நினைக்கக்கூடாது. உனக்கு விடுற அடியில இனி யாருமே எட்டிப்பார்க்க கூடாது. இவ்வாறு பேசினார்.

* ரஜினி ஆளுமையை கொச்சைப்படுத்தி பேச்சு: ஆதவ்க்கு திருமா குட்டு
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என திமுக மிரட்டியதாக ஆதவ் அர்ஜூனா கூறியது கற்பனை என நினைக்கிறேன். ரஜினி அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் ஆர்வம் காட்டக் கூடியவர் அல்ல. இதில் மயங்க கூடியவருமல்ல. ரசிகர்கள் வேண்டுகோளுக்காக கட்சி தொடங்கலாம் என நினைத்தார். வலதுசாரிகள், சங் பரிவார்களின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பதால் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருந்து விலகி நிற்கிறார்; வெளியேறி விட்டார். ரஜினியை ஆசைகாட்டி அரசியலுக்குள் இழுக்க முடியாது. அச்சுறுத்தி வெளியேற்ற முடியாது என்ற நிலையை எட்டிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். இது ரஜினியின் ஆளுமையையே கொச்சைப்படுத்தக்கூடிய ஒரு பேச்சு.

விசிகவிற்கு எத்தனை தொகுதி என்பது குறித்து பேச்சுவார்த்தை முடிந்தப் பிறகு முறைப்படி அறிவிப்பு செய்யப்படும். புதிய கட்சி ஆரம்பித்துள்ள சசிகலா அம்மையாருக்கு என் வாழ்த்துகள். அரசியல்ரீதியாக என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வரும் தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்க்கக் கூடிய கூட்டணி உருவாகவில்லை. அதிமுகவும் சிதறியுள்ளது. அவர்களால் கூட்டணியை கட்டமைக்க முடியவில்லை. திமுகவை எதிர்க்கக்கூடிய எதிர் கூட்டணி உருவாகவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறுவோம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Sattai Duraimurugan ,Vijay ,Naam ,Tamilar ,Party ,Vedaranyam, Nagapattinam district ,Naam Tamilar Party ,Propaganda Secretary ,
× RELATED அதிமுக என்ற கட்சியோடு தனது...