×

உல்லத்தி, கடநாடு பகுதிகளில் ரூ.1.11 கோடியில் வளர்ச்சி பணிகள்

ஊட்டி, பிப்.11: ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உல்லத்தி மற்றும் கடநாடு ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட அம்மநாடு பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.9.96 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடநாடு ஊராட்சிக்குட்பட்ட கொணஹட்டி பகுதியில் 14வது மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ் ரூ.26 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலை சீரமைக்கப்பட உள்ளது.

கடநாடு ஊராட்சிக்குட்பட்ட ஒடயரட்டி முதல் சின்னக்குன்னூர் வரை தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.49.29 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தகொம்பை முதல் பெட்டுதலா வரை ரூ.11.70 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் ரூ.1.11 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : areas ,Ullatti ,Kadanadu ,
× RELATED சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்