×

சைபர் குற்றங்களை தடுக்க நீலகிரியில் சிறப்பு காவல் நிலையம்

ஊட்டி, பிப்.11: சைபர் குற்றங்களை தடுப்பதற்காக நீலகிரி மாவட்டத்திலும் சிறப்பு காவல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில், அதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேக காவல்நிலையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, கடந்த 8ம் தேதி முதல் இந்த சிறப்பு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நீலகிரியிலும்  மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இந்த சிறப்பு காவல்நிலையம் துவக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்ஸ்பெக்டர் பிலிப் அதிகாரியாக மேலும், இந்த காவல்நிலையத்திற்கு தேவையான அனைத்து நவீன கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,`தமிழகம் முழுவதும் சைபர் குற்றங்களை தடுக்க தனி காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்திலும் தனி காவல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வர்த்தக மோசடி, செல்போன் மூலம் பேசி வங்கி கணக்கில் திருடுதல் போன்ற குற்றங்கள் உட்பட சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் இந்த காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் காலங்களில் சைபர் குற்றங்களை தடுக்க முடியும். அதேசமயம், இது போன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் தங்களுக்கு ஆன்லைன் மற்றும் செல்போன் மூலம் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் இந்த சிறப்பு காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : police station ,Nilgiris ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...