×

ஆலிப்பரம்பு பகவதி அம்மன் கோயிலில் 15 யானைகளுடன் திருவீதியுலா

 

பாலக்காடு, மார்ச் 13: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருத்தாலா அருகே செத்தலூரை அடுத்த ஆலிப்பரம்பு பகவதி அம்மன் கோயிலில் மாசி திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதியம் உச்சிக்கால பூஜைகள் முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலையில் 15 அலங்கார யானைகள் அணிவகுப்புடன் ஆலிப்பரம்பு கோயில் வளாகத்தில் அம்மன் யானை மீது எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர் திருவீதியுலா நடந்தது. இதில் தையம் நாட்டியம், சுவாமி வேடங்கள் அணிந்த கலைஞர்களின் நாட்டியங்கள் இடம்பெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
கள்ளு தொழிலை அழிக்கும் இடதுசாரி அரசின் கொள்கையை திருத்த வேண்டும்

Tags : Alipparambu Bhagavathy ,Amman ,Temple ,Palakkad ,Masi festival ,Alipparambu Bhagavathy Amman Temple ,Setthalur ,Tirutala ,Kerala ,
× RELATED தோட்டக்கலை பணியாளர்களின் போராட்டம்...