ராஜபாளையத்தில் பூத்துக்குலுங்கும் `மா’ விவசாயிகள் மகிழ்ச்சி

ராஜபாளையம், பிப். 11: ராஜபாளையம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாமரங்கள் பூத்துக்குலுங்குவதால் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக மாமரங்களில் பூக்கள் அதிகளவு பூத்துக் குலுங்குகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது மாலை, இரவு நேரங்களில் அதிகளவு குளிர் உள்ளதால் மா மரங்களில் உள்ள பூக்கள் உதிர்கின்றன. இதை தடுக்க விவசாயிகள் மருந்து தெளித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வரும் மாதங்களில் அதிக அளவு மழையோ, காற்றோ இல்லாமலிருந்தால் அதிக மாங்காய் விளைச்சல் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த ஆண்டு மாங்காய் வரத்து அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

Related Stories:

>