×

மனைவியை காப்பாற்ற வக்கில்லாதவர்: மகளிரை காப்பாற்றுவேன் என்கிறார்: விஜய்யை டேமேஜ் செய்த அதிமுக

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பேசுகையில், ‘‘பாஜவை எப்படி கட்டுக்குள் வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்.

தேர்தல் நேர கூட்டணி வேறு, கொள்கைகளும் சித்தாந்தங்களும் வேறு. கட்டிய மனைவியை காப்பாற்ற வக்கு இல்லாதவர், மகனையும் மகளையும் தன்னைப் போலவே திரிய விட்டவர் எல்லாம் மகளிரை காப்பாற்றுவேன் என வருகிறார். நம்மிடையே கூட வரலாம், நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்துப் நிர்மலா பெரியசாமி, ‘‘தான் செய்வது தவறு என்று தெரிந்திருந்தால் மேடையில் விஜய் அப்படி பேசி இருக்க மாட்டார். வெளியில் கூட வந்திருக்க மாட்டார். மகளிர் தின நிகழ்ச்சியில் முன் வரிசையில் உட்கார்ந்து இருந்த தவெக நிர்வாகிகளின் முகம் பரிதாபமாக இருந்தது. முன்பெல்லாம் ஒவ்வொரு தவெக நிர்வாகி முகத்திலும் அமைச்சராகி தனி இலாகாவில் செயல்படுவது போல செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். விஜய் நடந்து கொண்டதை பார்த்த பிறகு தான், நிர்வாகிகளுக்கு பயம் வந்துவிட்டது’’ என்றார்.

Tags : AIADMK ,Vijay ,Chief Minister ,Jayalalithaa ,Women's Day ,Ambattur ,Nirmala Periyasamy ,BJP ,
× RELATED வரும் சட்டமன்றத் தேர்தலில்...