×

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: கால் இறுதியில் அல்காரஸ்

 

இண்டியன்வெல்ஸ்: இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் நேற்று, ஸ்பெயினை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்காரஸ் அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்காரஸ், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் மோதினர். முதல் செட்டில் அநாயாசமாக ஆடிய அல்காரஸ், 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் இருவரும் விட்டுத்தராமல் ஆடி புள்ளிகளை எடுத்ததால் டைபிரேக்கர் வரை நீண்டது.

கடைசியில் 7-6 (7-2) என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டையும் வென்ற அல்காரஸ், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிவாகை சூடி காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், பிரிட்டன் வீரர் ஜேக் டிரேப்பர் மோதினர். முதல் இரு செட்களை ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை டைபிரேக்கரில் டிரேப்பர் வசப்படுத்தினார். அதனால், 4-6, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்ற டிரேப்பர் காலிறுதிக்குள் நுழைந்தார்.

* கலக்கலா வென்ற பெகுலா

இண்டியன்வெல்ஸ் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா – சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் மோதினர். முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் பெகுலா எளிதில் வசப்படுத்தினார். இருப்பினும் 2வது செட்டில் பென்சிக் கடுமையாக போராடியதால் டைபிரேக்கர் வரை அந்த செட் நீண்டது. கடைசியில் அந்த செட்டையும், 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் பெகுலா கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற பெகுலா காலிறுதிக்கு முன்னேறினார்.

Tags : Indian Wells Tennis ,Alcaraz ,Indian Wells ,Indian Wells Open Tennis Men's Singles Tournament ,Carlos Alcaraz ,Spain ,Indian Wells Open Tennis Tournament ,Indian ,Wells, USA… ,
× RELATED ஐபிஎல் தொடரில் கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆடுவதில் சிக்கல்