அமராவதி : ஆந்திரமாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பாலை குடித்த வழக்கில் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி முதல் வழக்கு பதிவான நிலையில், பால் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்பகுதி முழுவதும் மருத்துவ குழுக்கள் அமைத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
