×

ஹோர்முஸ் நீரிணை வழியாக 2 இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்: ஈரான் அரசு அனுமதி..!

 

தெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதி வழங்கியது. அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா திடீரென அந்நாட்டின் மீது கடந்த மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை அடைத்தது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதிக்குமாறு ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டார். ஈரான் அமைச்சர் அரகாச்சியுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது. புஷ்பக் மற்றும் பரிமள் ஆகிய 2 இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியது. இதனால் அரபு நாடுகளில் இருந்து தடைபட்ட கச்சா எண்ணெய் – கேஸ் சப்ளை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். இதனால் கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாட்டுக்கு தீர்வு ஏற்படும்.

அதேவேளையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதில் அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களுக்கு தொடர்ந்து ஈரான் தடை விதித்துள்ளது.

Tags : Strait of Hormuz ,of Iran ,Tehran ,United States ,Iran ,
× RELATED ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதி!!