டெல்லி: சிலிண்டர் தட்டுப்பாட்டால் ரயில்களில் வழங்கப்படும் உணவு நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல். முன்பதிவு செய்யும்போது உணவும் முன்பதிவு செய்பவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு தட்டுப்பாடு இல்லை என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
