×

தேர்தலை முன்னிட்டு 8 தொகுதிகளில் 211 மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

ஈரோடு, மார்ச் 12: ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 8 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்ட 11 மண்டல போலீஸ் அதிகாரிகள் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து பயிற்சி கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இதனையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிக்கும் 211 மண்டல அலுவலர்களும், 211 மண்டல போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு வேளாளர் கல்லூரியில் 211 மண்டல போலீஸ் அதிகாரிகளும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்பி சுஜாதா தலைமை தாங்கினார்.

இதில், போலீஸ் அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள 2,379 வாக்குச்சாவடிகளிலும் தேர்தலுக்கு முன்னர் செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகளின் தயார் நிலைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக போலீசாரின் பொறுப்பு, கடமைகள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய சட்டம் ஒழுங்கு பணிகளின் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் போலீஸ் தேர்தல் பிரிவு டிஎஸ்பி பாஸ்கர்பாபு, குற்றப்பிரிவு டிஎஸ்பி சுகுமார், போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Erode ,Erode district ,Tamil Nadu ,
× RELATED மண் அடுப்புகள் விற்பனைக்கு குவிப்பு...