×

இதயநோய் மருந்து என நினைத்து பூச்சி மருந்து குடித்த பெண் பரிதாப சாவு

 

மதுரை, மார்ச் 11: மதுரை, ஐராவதநல்லூரை சேர்ந்த முருகன், வண்டியூர் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(50). இவர்களின் 3 மகள்களும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசிக்கின்றனர். இந்நிலையில் இதயநோய் பாதிப்பு எதிரொலியாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராஜேஸ்வரி தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அவர் குடிக்க வேண்டிய மருந்து என நினைத்து அருகே இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், கணவர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார். இது குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Madurai ,Murugan ,Airavathanallur, Madurai ,Vandiyur ,Rajeswari ,
× RELATED வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி புதிய ரயில் வழித்தடம் அமைகிறது