பொன்னமராவதி வட்டார வள மைய புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு

பொன்னமராவதி, பிப். 11: பொன்னமராவதி வட்டார வள மைய புதுப்பிக்கப்பட்ட அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது. கட்டிடத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி திறந்து வைத்தார். இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிசந்திரன், பள்ளி துணை ஆய்வாளர் வேலுச்சாமி, வட்டார கல்வி அலுவலர் பால்டேவிட் ரொசாரியோ வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மேற்கொண்ட பெருமராமத்து பணியின் சுருக்க காணொலியை ஆசிரியர் பயிற்றுனர் அழகுராஜா காட்சிப்படுத்தினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருப்பையா, மணிமாறன், பொன்னமராவதி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் சரவணன் நன்றி கூறினார்.

Related Stories:

>