திருவள்ளூர், மார்ச்.10: திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட குறை தீர்ப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரதாப் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறையை தீர்ப்பதற்காக, குறை தீர்ப்பாளராக ஆண்டனி சிலுவை என்பவர், சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்திட்டம் தொடர்பாக குறைபாடுகள் இருப்பின், அவருடைய தொலைபேசி எண்:89258 11340 மற்றும் மின்னஞ்சல் முகவரி: ombudsmanmgtlr@ gmail.com மூலமாக தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
