×

வேலாயுதம்பாளையம் அருகே பொது இடத்தில் தகராறு செய்த வாலிபர் கைது

வேலாயுதம்பாளையம், மார்ச். 9: பொது இடத்தில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் புகளூர் கேசிஆர் நகர் பகுதியில் மது அருந்திக்கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு இருப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.

சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று எச்சரித்தனர். ஆனாலும் அவர் கேட்காததால் அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் தவுட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் கருப்பண்ணார் கோயில் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் (38) என்பது தெரியவந்தது. போலீசார் சதாசிவத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags : Velayudhampalayam ,KCR Nagar ,Pugalur, Karur district ,
× RELATED கடவூர் அருகே பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது