×

கடவூர் அருகே பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது

கடவூர் மார்ச் 9: கடவூர் அருகே பொது இடத்தில் மது அருந்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் கடவூர் அருகே பாலவிடுதி காவல் சரகம் பகுதியில் உள்ள பொது இடங்களில் மதுபானங்கள் அருந்துவதாக பொதுமக்கள் பாலவிடுதி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் பாலவிடுதி போலீஸ் சார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலவிடுதி வார சந்தை அருகே உள்ள பொது இடத்தில் சேர்வைக்காரன்பட்டியைசேர்ந்த பாஸ்கர் (28) மற்றும் திருச்சி கிராப்பட்டி முஸ்லிம் தெருவைச்செர்ந்ட்ஜ ராமமூர்த்தி (51) ஆகிய இருவரும் மதுபானங்களை குடித்துக் கொண்டு இருந்துள்ளார்.

இதே போல் கவரப்பட்டி பிரிவு ரோடு அருகே சதீஷ் (34), அத்திகுளத்துப்பட்டி தங்கவேல் (50) ஆகிய இருவரும் மதுபானங்களை குடித்துக்கொண்டு இருந்துள்ளனர். இதனை அடுத்து பொது இடத்தில் மதுபானம் குடித்த பாஸ்கர், ராமமூர்த்தி, சதீஷ், தங்கவேல் ஆகியோர் மீது பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags : Kadavur ,Palaviduti police ,Palaviduti ,Karur ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே பொது இடத்தில் தகராறு செய்த வாலிபர் கைது