×

உயர்மட்ட மேம்பாலத்திற்கு தூண்கள் அமைக்கும் பணி

 

சேலம், மார்ச் 9: சேலம்-விருத்தாசலம் ரயில் வழித்தடத்தில் முள்ளுவாடி 1வது கேட்டில் உயர்மட்ட மேம்பாலத்திற்கு தூண்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சேலம்-விருத்தாசலம் ரயில் வழித்தடத்தில், தினசரி 8 பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் வரும்போது சத்திரம், முள்ளுவாடி 1வது மற்றும் 2வது கேட், அணைமேடு, தில்லைநகர், பொன்னம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரயில் கேட் மூடப்பட்டதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியின், அமைப்பினர், வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த அதிமுக ஆட்சியில் சத்திரம், முள்ளுவாடி 1வது மற்றும் 2வது கேட், அணைமேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சத்திரத்தில் மேம்பாலப் பணிகள் முடிந்து, கடந்த 2020ம் ஆண்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. அதே போல், முள்ளுவாடி 2வது கேட் 2023ம் ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

Tags : Salem ,Mulluwadadi 1st Gate ,Salem-Virthasalam ,
× RELATED மகனை தேடி சென்ற மீன் வியாபாரி மாயம்