×

மனைவிக்கு உண்மையாக இல்லாத நபர் பெண்கள் பாதுகாவலரா? எச்.ராஜா கடும் தாக்கு

 

சென்னை: மனைவிக்கு உண்மையாக இல்லாத நபர் பெண்கள் பாதுகாவலரா என்று எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக பாஜ முன்னாள் தலைவர் எச்.ராஜா தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: பெற்றோர், உற்றார், உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பின்னாளில் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டு… அதே நபர் பொது மேடைகளில் பெண்ணுரிமை குறித்து பேசுவதும்… மனைவிக்கு உண்மையாக இல்லாத அதே நபர் குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி மகளிர் தின வாழ்த்து கூறி தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வதும்… தமிழக அரசியலில் பார்க்க முடிந்த வியப்பான நகைப்பு.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : H. Raja ,Chennai ,Tamil ,Nadu ,BJP ,
× RELATED நாளை தொடங்கும் சென்னை கடற்கரை –...