×

மாதாந்திர உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

தென்காசி, பிப்.10:  தென்காசியில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கவேண்டும். கடும் ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் இசக்கி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் கணபதி பேசினார். காதுகேளாதோர் சங்கம் மாவட்ட செயலாளர் முகமது லத்தீப், உதவித் தலைவர் ஏசுதாசன் ராஜா, முத்துக்குமாரசாமி, முருகன், ஜெகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அம்பை:  அம்பை தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட இணைச்செயலாளர் அகஸ்தியராஜன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கோரிக்கை மனுக்களை தனி தாசில்தார் லட்சுமி, தலைமை இடத்து துணை தாசில்தார் மணி ஆகியோரிடம் வழங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்க அம்பை ஒன்றிய தலைவர் சுரேஷ்பாபு, துணைத்தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெகதீஷ் மற்றும் 37 பெண்கள்  உள்பட 78 மாற்றுத்திறனாளிகளை அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கைது செய்தனர். சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியூறுத்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட இணைசெயலாளர் ஜெயந்தி, துணை செயலாளர் அமராவதி, நிர்வாகிகள் குமார், பாலசுப்பிரமணியன், ரத்தினக்குமார், கணேசன், குருநாதன், அஞ்சலி, முருகேஸ்வரி,  தனலட்சுமி, மாரியம்மாள், உமாமகேஸ்வரி, டிஒய்எப்ஐ பொறுப்பாளர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.

நாங்குநேரி: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினர் இசக்கியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தார். நாங்குநேரி விவசாய சங்க தாலுகா செயலாளர் கணேசன் வரவேற்றார். கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், நாங்குநேரி முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன். கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கிய எட்வின், நாங்குநேரி திமுக நகர செயலாளர் வானமாமலை, துணைச்செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் காமராஜ், தகவல் தொழில்நுட்ப அணி நாங்குநேரி தொகுதி அமைப்பாளர் செல்வராஜ், பேரூர் அமைப்பாளர் சங்கர், சங்க பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, சேகர், வானமாமலை, இசக்கிதாய், தர்மராஜ் திருப்பாற்கடல்நம்பி, சாமுவேல், பிரபாகரன், ஆவுடையாச்சி, சேர்மதுரை, முருகேஷ் ஆறுமுகம் பங்கேற்றனர்.

சிவகிரி:  சிவகிரி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். தென்மலை துணைச் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். வாசுதேவநல்லூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் நடராஜன், சிவகிரி கிளைச் செயலாளர் தங்கராஜ், தென்மலை கிளைத் தலைவர் மாரிமுத்து, ராயகிரி கருத்தபாண்டியன், கருப்பையா சிவகிரி வேலுச்சாமி, பாலசுப்பிரமணியன், மணி, அப்துல், தேவிபட்டணம் காளிமுத்து, அமுல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். அவர்களுடன் குடிமைப்பொருள் தாசில்தார் ராமலிங்கம், சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags :
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு