×

காரிமங்கலம் அருகே மான் இறைச்சியுடன் 2 வாலிபர்கள் கைது

*டூவீலர் பறிமுதல்

தர்மபுரி : காரிமங்கலம் பகுதியில், மான் இறைச்சி விற்பனைக்கு கொண்டு வந்த 2 வாலிபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 கிலோ மான் இறைச்சியுடன் டூவீலர் கைப்பற்றப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா வெள்ளிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் மகன் அஜித்(25). இவரது உறவினர் தர்மபுரி மாவட்டம் அரூர் நம்பிராஜ் மகன் சரவணன்(22).

இவர்கள், இருவரும் சேர்ந்து வெள்ளிமலை கிராமத்திற்கு அருகில் உள்ள காப்புக்காட்டில் மான் வேட்டையாடி அறுத்து கறியாக பொட்டலம் கட்டி காரிமங்கலம் பகுதியில் விற்பனை செய்வதற்காக டூவீலரில் கொண்டு வந்தனர். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் இரண்டு பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர், பாலக்கோடு வனச்சரக அலுவலகம் அழைத்து வந்தனர். வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் விசாரணைக்கு பின்பு காரிமங்கலம் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி விசாரித்து, 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

இதன்பேரில், 2 பேரும் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து 5 கிலோ மான் இறைச்சி மற்றும் டூவீலர் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து பாலக்கோடு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Karimangalam ,Dharmapuri ,Manimaran ,Taluga Silvimalai ,Krishnagiri district ,Othangaray ,
× RELATED பொன்னமராவதியில் 487 கிலோ குட்கா, தார் ஜீப் பறிமுதல்