×

பெரியகுளம், போடி தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம்

தேனி, பிப். 10: பெரியகுளம், போடி சட்டமன்றத் தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். தேனி மாவட்டத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்னும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஆண்டிபட்டி, கம்பம் சட்டமன்ற தொகுதிகளில்நேற்று பிரசாரம் செய்தார். இரண்டாம் நாளாக தேனி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட போடி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இதன்படி இன்று காலை 10 மணிக்கு தேனி பழனிசெட்டிப்பட்டியில் உள்ள பஸ்நிறுத்தம் அருகே பிரசாரம் செய்கிறார்.இதை தொடர்ந்து கோடாங்கிபட்டி, போடி மீனாட்சிபுரம், அம்பேத்கர் சிலை அருகில் மற்றும் போடி தேவர் சிலை அருகில் பிரச்சாரம் செய்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு தேனி பழனிசெட்டிப்பட்டியில் உள்ள ஹோட்டல் கூட்ட அரங்கில் இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேனி அல்லிநகரம் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரம் செய்கிறார்.

பின்னர் லட்சுமிபுரம் பஸ்நிறுத்தம் அருகில், பெரியகுளம் தென்கரை காந்தி சிலை அருகில், அதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி பஸ்நிலையம் அருகிலும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் திமுகவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags : Stalin ,Udayanithi ,campaign ,Periyakulam ,constituencies ,Bodi ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...