×

கோயில் நிலங்களின் விவரம் இணையத்தில் வெளியிடவேண்டும் ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கரூர் தாலுகா காதப்பாறை கிராமத்தில் வெண்ணைமலை பாலசுப்ரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான 7.81 ஏக்கர் நிலத்தை தனியார் அறக்கட்டளை பயன்படுத்துவது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: கோயில் சொத்துக்களை 5 ஆண்டுக்கு மேல் குத்தகைக்கு வழங்க அறநிலையத்துறையின் அனுமதியும், அதற்கு முன் அரசின் ஒப்புதலும் அவசியம் என சட்டம் கூறுகிறது.

இந்த வழக்கில் 30 ஆண்டுகளுக்கு துணை குத்தகை வழங்கப்பட்டதற்கு எந்த அதிகாரப்பூர்வ அனுமதியும் பெறப்படாததால், ஒப்பந்தம் சட்டப்படி செல்லாது. மேல்முறையீட்டாளருக்கு எந்த உரிமையும் கிடையாது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் விபரங்கள், நில அளவு, குத்தகை காலம், குத்தகையாளர் விபரம் மற்றும் குத்தகை தொகை ஆகியவற்றை அறநிலைய துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.

Tags : High Court ,Madurai ,Madurai High Court ,P. Velmurugan ,P. Pugazhenthi ,Vennaimalai Balasubramanian Swamy Temple ,Kadapparai village ,Karur taluka ,
× RELATED திமுக சார்பில் பேரவைத் தேர்தலில்...