நகை, வெள்ளி திருட்டு

மதுரை உத்தங்குடி இலந்தைக்குளத்தை சேர்ந்தவர்  கௌரிசங்கர் (35). இவர் கடந்த  சில தினங்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு  வெளியூர் சென்றுவிட்டார்.  திரும்பி வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு  உடைக்கப்பட்டு, உள்ளே  பீரோவிலிருந்த 5 பவுன்  தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பாத்திரங்கள்,  டி.வியை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. கௌரிசங்கர் புகாரில் புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>