கடையில் பொருட்கள் திருட்டு

திருச்செங்கோடு, பிப். 10: திருச்செங்கோடு அருகேயுள்ள குமரமங்கலத்தில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்திருப்பவர் சேகர் (54). இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடைக்கு மேலிருந்த அட்டை உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையில் வைத்திருந்த இருந்த டிவி மற்றும் எலக்ட்ரானிக் சாதனைங்கள் என ₹1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>