×

ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்க அரசு உத்தரவு!

 

சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து அணையின் பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காகவும், கிணறு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், புதிய பாசனப் பகுதிகளுக்கு 05.03.2026 அன்று காலை 8 மணி முதல் அணையின் பிரதான கால்வாய் மதகு வழியாக வலது புற கால்வாயின் மூலம் 30 கனஅடி/வினாடி மற்றும் இடது புற கால்வாயின் மூலம் 15 கனஅடி/வினாடி ஆக மொத்தம் 45 கனஅடி/வினாடி என நாளொன்றுக்கு 3.888 மில்லியன் கன அடி வீதம் 8 நாட்களுக்கு 31.396 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மற்றும் பழைய பாசனப் பகுதிகளுக்கு 13.03.2026 அன்று காலை 8 மணி முதல் அணையின் பிரதான கால்வாய் மதகு வழியாக 60 கனஅடி/வினாடிஎன நீர் திறந்து ஆற்று வெளி போக்கி (River Outlet) வழியாக நாளொன்றுக்கு 5.184 மில்லியன் கன அடி வீதம் 9 நாட்களுக்கு 47.094 மில்லியன் கன அடிக்கு மிகாமல் சிறப்பு நனைப்பாக (special wetting), தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், புழுதிக்குட்டை, குறிச்சி, சின்னமநாயக்கன்பாளையம், சந்திரபிள்ளை வலசு, கோலத்துகோம்பை மற்றும் நீர்முள்ளிக்குட்டை ஆகிய கிராமங்கள் பயன்பெறும்.

 

Tags : Anaimaduvu Reservoir ,Salem ,Salem District ,Vahappadi Circle ,Puputhikuttai Village ,
× RELATED கிணற்றில் கார் கவிழ்ந்து உயிரிழந்த 4...