×

தங்கம் விலையில் மாற்றம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,560 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக காலை, மாலை என பவுனுக்கு ரூ.1,560 குறைந்தது. தொடர்ந்து 2 நாளில் பவுன் ரூ.2,480 குறைவால் நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. தங்கம் விலை கடந்த 3 வாரத்திற்கும் மேலாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலின் காரணமாக கடந்த மாதம் 28ம் தேதி மற்றும் கடந்த 1ம் தேதி என 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.7000 வரை அதிகரித்தது.

வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.30 ஆயிரம் அதிகரித்தது. இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.15,660க்கும், பவுனுக்கு ரூ.920 குறைந்து ஒரு பவுன் ரூ.1,25,280க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை குறைந்தது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.15,650க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 25,200க்கும் விற்றது. தொடர்ந்து மாலையிலும் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது.

அதாவது, மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 குறைந்து ஒரு கிராம் ரூ.15465க்கும், பவுனுக்கு ரூ.1480 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 23,720க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து 2 நாளில் பவுனுக்கு ரூ.2,480 அதே நேரத்தில் நேற்று வெள்ளி விலை காலை, மாலை என எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.315க்கும், பார் வெள்ளி ரூ.3.15 லட்சத்துக்கும் விற்பனையானது.

Tags : Chennai ,
× RELATED தங்கம் விலை மேலும் குறைந்தது;...