×

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி: ரூ.9 லட்சம் கோடி இழப்பு

 

மும்பை: இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நேற்று திடீரென தாக்குதல்களை நடத்த தொடங்கியதை அடுத்து, ஈரான் பதிலுக்கு அமெரிக்காவின் ஏவுதளங்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதலை நடத்த தொடங்கியது. இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை 15% வரை உயர்ந்துள்ளது. போர் தொடர்ந்து நீடித்தால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் வரை உயரும் என பர்க்லே ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவிவித்துள்ளது.

இதனிடையே இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1210 புள்ளிகள் சரிந்து 80,070 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 370 புள்ளிகள் சரிந்து 24,808 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு சில மணி நேரத்தில் ரூ.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது

 

 

Tags : Israel ,Iran ,Mumbai ,US ,
× RELATED தங்கம் விலை மேலும் குறைந்தது;...