×

ஆலங்குடி கோவிலூரில் ஜல்லிக்கட்டு; 720 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்: 320 வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்

புதுக்கோட்டை: ஆலங்குடி கோவிலூரில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 720 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 320 வீரர்கள் மல்லுக்கட்டினர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கோவிலூர் முத்து மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது.

இதற்காக புதுக்கோட்ைட, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, மதுரை, கரூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டது. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 720 காளைகள், 320 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Tags : Jallikattu ,Alangudi Kovilur ,Pudukottai ,Masi festival of Kovilur ,Muthu ,Mariamman Temple ,Alangudi ,
× RELATED 300 மின்சார சிற்றுந்துகள்: ஒப்பந்தம் கோரிய சென்னை மாநகர போக்குவரத்து கழகம்