×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: ஊத்துக்கோட்டை பகுதியில் 1000 பேருக்கு அன்னதானம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை திமுக இளைஞரணி சார்பில், முதல்வர் மு.ஸ்டாலின் 73வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இளைஞரணி அமைப்பாளர் ரகீம் ரகீம் தலைமை வகித்தார். மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் கோகுல்கிருஷ்ணன், வக்கீல் திலீப்குமார், கோல்டுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக அவைத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி சம்சுதீன், கவுன்சிலர் ஜீவா, மோகன்பாபு, கோகுல், பாபு, அருண் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் பட்டாசு வெடித்து அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கினர். 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்பின்னர் ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Uthukkottai ,Uthukkottai DMK ,Rahim Rahim ,District Ayalakka ,Gokulkrishnan ,Dilipkumar ,Goldumani ,
× RELATED வடசென்னை அனல் மின்நிலைய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்