×

கொளத்தூர் தொகுதியில் முதியோர் இல்லம் உள்விளையாட்டு அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

பெரம்பூர்: முதல்வரும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை மக்கள் நலத்திட்ட பணிகளை துவக்கிவைத்ததுடன் முதியோர் இல்லம், உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை திறந்துவைத்தார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜி நகர் 8வது தெருவில் அருள்மிகு தேவி பாலியம்மன், இளங்காளியம்மன் கோயில் சார்பில் 11.88 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர் அங்குள்ள முதியவர்களிடம் உரையாடினார்.

கொளத்தூர் கார்த்திகேயன் சாலையில் 68 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். இது தரைத்தளம், முதல் தளத்துடன் சுமார் 1657 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஆழ்துளை கிணறு, மோட்டார், சுகாதார சாதனங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள். வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ராஜா தெருவில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 36.59 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சி லோகோ ஸ்கீம் 1வது பிரதான சாலையில் சிங்காரச் சென்னை 2.0 திட்ட நிதி மற்றும் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 2.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். மாதவரம் நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 7.64 கோடி செலவில் சென்னை நடுநிலைப்பள்ளிக்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மேயர் பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் துரைக்கண்ணன், காங்கிரஸ் விளையாட்டு அணி தலைவர் பெரம்பூர் நிசார், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன், பொது நூலக இயக்குனர் ஜெயந்தி, கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார் கலந்துகொண்டனர்.

Tags : Kolathur ,Chief Minister ,M.K. Stalin ,Perambur ,Assembly ,Constituency ,Member of Parliament ,Arulmigu… ,
× RELATED அமெரிக்கர்கள் இனி குடியுரிமை...