×

ஒரு கோடி பார்வைகளைக் கடந்தது முதலமைச்சரின் ‘ஒரே தலைவன்’ வீடியோ!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஒரே தலைவன்’ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு வீடியோ, ஒரு கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த வீடியோ, முதலமைச்சரின் ஐம்பது ஆண்டுகால நீண்ட அரசியல் பயணத்தையும், அவர் எதிர்கொண்ட சவால்களையும் விரிவாகப் பதிவு செய்துள்ளது. மிசா காலத்தில் சிறை சென்றது முதல், மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது வரையிலான அவரது விடாமுயற்சியை இது படம் பிடித்துக் காட்டுகிறது.

திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படைத் தத்துவங்களான சமூக நீதி, சமத்துவம், அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றை இந்தத் தொகுப்பு முன்னிலைப் படுத்துகிறது. குறிப்பாக, காலை உணவுத் திட்டம், மகளிருக்கான விடியல் பயணம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை போன்ற முன்னோடித் திட்டங்கள் சாமானிய மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள நேர்மறையான மாற்றங்களை எடுத்துரைக்கிறது. இத்திட்டங்களை வெறும் இலவசங்களாகப் பார்க்காமல், சமூக மேம்பாட்டிற்கான ‘மனித முதலீடு’ என்று வரையறுக்கிறது.

மேலும், மாநில உரிமை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, கூட்டாட்சித் தத்துவங்களில் முதலமைச்சர் கொண்டுள்ள சமரசமற்ற நிலைப்பாட்டை விவரிக்கிறது. கலைஞரின் கடின உழைப்பையே தனது பாதையாகக் கொண்டு செயல்படும் முதலமைச்சரின் ஆளுமையைப் பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காணொளி ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆளுமையை விளக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி., நடிகர் ரஜினிகாந்த், மூத்த பத்திரிகையாளர் ’தி இந்து’ என். ராம் உள்ளிட்ட பிரபலங்களின் கருத்துகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

Tags : Prime ,Chief Minister ,Tamil Nadu ,K. ,YouTube ,Stalin ,
× RELATED எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியால்...