×

சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கிடங்கில் தாக்குதல் நடத்திய ஈரான்: பதற்றம் அதிகரிப்பு

ரியாத்: சவுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ என்ற பெயரில் ஈரான் மீது நடத்திய கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணை மற்றும் டிரோன் படைகளை வளைகுடா நாடுகளுக்கு எதிராகத் திருப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் சவுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.

அராம்கோ உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையாகும். ஈரானின் டிரோன் தாக்குதலால் அராம்கோ நிறுவனத்தின் ராஸ் தனுரா ஆலையில் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்தது. Saudi Aramco எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூயப்பட்டுள்ளது. ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலையை மூடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதியில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தாக்கப்பட்டால் உலக கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வு ஏற்படும்.

Tags : Iran ,Saudi Arabia ,Riyadh ,Aramco ,Israeli ,Operation Roaring ,
× RELATED ஒரே கட்டமாக நடக்கிறது: தமிழகத்தில்...