×

‘ஜெ இறப்புக்கு காரணம் சசிகலாதான்’ குடும்பமே நடத்த முடியாதவர் நாட்டை ஆள போகிறாராம்: தளவாய்சுந்தரம் பரபரப்பு பேச்சு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள இரவிபுதூரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பேசியதாவது: 1972ல் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கினார். எம்.ஜி.ஆருக்கு பின் ஜெயலலிதா இந்த இயக்கத்தை வழி நடத்தி ஆட்சிக்கு கொண்டு வந்தார். 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கத்தை அழிக்க முடியாது என்றார். இப்போது எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை வழி நடத்துகிறார்.

இப்போது ஒருவர் புதிதாக வந்திருக்கிறார். முதலில் 4 பேரை கொள்கை தலைவர் என்று சொன்னார். இப்போது 5வதாக எம்.ஜி.ஆர். படத்தை வைத்து கொண்டார். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. எல்லோரும் ெஜயலலிதா ஆக முடியாது. அவரது மனைவி விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்திருக்கிறார். அதாவது நடிகர் விஜய் மனைவி அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு செய்திருக்கிறார். அதில் என்ன சொல்லி இருக்கிறார். நான் பெயர் சொல்ல விரும்பாத நடிகையுடன் எனது கணவர் இருக்கிறார் என கூறி உள்ளார்.

குடும்பத்தையே சரியாக நடத்த முடியாதவர், நாட்டை ஆள போகிறாரா? ஜெயலலிதா இறப்புக்கு காரணம் சசிகலா தான். தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் பல லட்சம் கோடி ஊழல் செய்து, வழக்கில் சிக்க வைத்தார். சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்ல முடிவு செய்தபோது, கொண்டு செல்ல முடியாத வகையில் செய்தவர் சசிகலா. ஒரு வேலைக்காரியாக அம்மா கூட சேர்ந்தவர், இப்போது கட்சி ஆரம்பிக்கிறார். அப்படி என்றால் எவ்வளவு சொத்து இருக்கும் என்று பார்த்து கொள்ளுங்கள். அந்தளவுக்கு ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம் வெட்ட வெளிச்சமாகி கொண்டு இருக்கிறது என்றார்.

Tags : Sasikala ,J ,Thalavaisundaram ,Nagercoil ,Kumari East ,District ,MLA ,AIADMK ,Raviputhur ,Anjugramam ,Kumari district ,MGR ,Jayalalithaa ,
× RELATED தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்...