- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- கே
- ஸ்டாலின்
- கிராமக் கோயில் பாதிரியர்
- தொண்டு அமைச்சகம்
- மைலாபூர், சென்னை
சென்னை: கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை மயிலப்பூரில் அறநிலையத்துறை சார்பில் நடக்கும் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
முதல்வரின் உரையில்;
திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான். அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த விழா. எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்வதெல்லாம் வெறும் வாய்வார்த்தையல்ல. சொற்களில் செல்வதை செயல்களில் நிரூபிக்கப்படுகிறது என்பதற்கு அடையாளமே இந்த மாநாடு. உண்மையான ஆன்மிகவாதிகள், இறை பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு தான் இந்த திராவிட மாடல் அரசு.
இந்த மாநாட்டை பார்க்கும்போது பலருக்கு வியப்பாக இருக்கலம், ஏன் சிலருக்கு எரிச்சல் கூட வரலாம். கிராம கோயில்களில் பணியாற்றும் கிராம பூசாரிகள் ஆகிய நீங்களும் இந்த சமூதாயத்தில் ஒரு அங்கம் தான். உங்களுடைய வாழ்விலும் விடியல் ஏற்படும் என்ற எண்ணத்தில் தான் இந்த அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களின் உரிமைகளை நிலைநிறுத்திய திராவிட இயக்கங்களின் உணர்வை நமது அரசு நிலைநாட்டியுள்ளது.
ஒரு காலத்தில் கோயில் இருக்ககூடிய தெருக்களில் பலரால் நுழையமுடியாத நிலை இருந்தது. அதனை மாற்றி கோயில் உள்ளே அனைத்து தர மக்களும் வரலாம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம். அன்னை தமிழில் அர்ச்சனை செய்யலாம் என மாற்றியுள்ளோம். இந்த மாற்றம் தான் நாம் விரும்புகிற சமூக முன்னேற்றம். இதை தான் உண்மையான இறை பற்றாளர்களும் விரும்புவார்கள். இறை நம்பிக்கையை பொறுத்தவரையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு என்பது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று திருமூலர் சொன்ன வழிதான் என்று பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார்.
அதேபோல கலைஞர் கோயிலிகள் கூடாது என்பது அல்ல; அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என கூறியுள்ளார். அந்த வழியில் அனைவருக்கும் மதிப்பளிக்கும், அனைவரது மாண்பையும் காக்கும், அனைவரது உரிமைகளையும் பாதுகாக்கும் துறையாக அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது கூடா மக்களுக்கு தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்க கூடிய யாரைகேட்டாளும் நமது அமைச்சர் சேகர்பாபு-வின் பெயரை கூறுவார்கள்.
அந்த அளவுக்கு நாள்தோறும் ஏதாவது ஒரு விழா, ஒரு கோயிலை புதுபிப்பது என ஏதாவது செய்துகொண்டிருக்கிறார். நான் அதிகமாக எந்த துறையின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் என கேட்டால் இந்து சமய அறநிலையத்துறையின் நிகழ்ச்சியில் தான் என கூறுவேன். அந்த அளவுக்கு சிறப்பாக, வேகமாக செயல்படுகிறார். அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள சாதனைகளில் சில புள்ளி விவரங்களை தலைப்பு செய்திகளாக சொல்ல விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு நம் அரசு பொறுப்பேற்ற 1759 நாட்களில் 4,335 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அனைத்து சாதியினர் அர்ச்சகர் திட்டத்தின் கீழ், 29 அர்ச்சகர்கள் பணிநியமணம் செய்யப்பட்டுள்ளனர். 12 பெண் ஓதுவார்கள் உள்பட 46 ஓதுவார்கள் பணி நியமணம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக இந்த துறையில் 813 நபர்களுக்கு பணிநியமண ஆணை வழங்கப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 946 அலுவலர்களின் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் ஓய்வூதியம் ரூ.5,000 ஆகவும், அவர்களது குடும்ப ஓய்வூதியம் ரூ. 2,500- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 19 ஆயிரம் ஒருகால பூஜை திட்ட திருக்கோயில்கள் அர்ச்சகர்களுக்கு மாதம்தோரும் ஊக்கத்தொகையாக ரூ.1500 வழங்கப்படுகிறது.
ரூ.221 கோடி மதிப்பீட்டில் 616 குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. பணிகாலத்தில் இயற்கை எய்திய திருக்கோயில் பணியாளர்களுக்கு குடும்ப நில நிதியாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல்பரிசோதனை திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமக்கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4000-ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கோயில் சொத்துகளை மீட்க பெரும் முயர்ச்சி எடுத்து அதிலும் சாதனைபடைத்துள்ளோம். ரூ.8,440 கோடி மதிப்பீலான 8140 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது வழக்கம். அதே போல பூசாரிகளின் நலனுக்காக 11 புதிய அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
- ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு பூசாரிகளுக்கு புத்தாடை
வழங்கப்படும் - ஈமச்சடங்கு தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்
- பூசாரிகள் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.50,000லிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்படும்
- ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்
- பூசாரிகளின் மகன், மகளுக்கு வழங்கப்படும் பள்ளி கல்வி உதவித் தொகை மேலும் ரூ.1000 உயர்த்தி வழங்கப்படும்
- பூசாரிகள், பூசாரி மகன் மகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகை மேலும் ரூ.1000 உயர்த்தி வழங்கப்படும்.
- பூசாரிகளின் மகன், மகளுக்கான உயர்கல்விக்கான மேலும் ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும்
- பூசாரிகளின் மகன், மகளுக்கான தொழில்சார்ந்த உயர்கல்விக்கான மேலும் ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும்
- பூசாரிகளுக்கு மூக்கு கண்ணாடி வாங்குவதற்கான உதவித்தொகை ரூ.500லிருந்து ரூ.1000ஆக உயர்த்தி வழங்கப்படும்
- கிராம கோயில் பூசாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.75,000லிருந்து ரூ. 1.25 லட்சமாக உயர்த்தப்படும்.
- பூசாரிகளின் மகன், மகளுக்கான தொழில் பயிற்சி நிலையத்தில் பயில வழங்கப்படும் உதவித்தொகை மேலும் ரூ.1000ஆக உயர்த்தி வழங்கப்படும்
சமரசமும், சமத்துவமும் தான் ஆன்மிக பாதையாக இருக்க முடியும். சமத்துவத்தை போற்றும் அனைவரையும் நாம் போற்றுவோம். மக்களின் சுயமரியாதை மற்றும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என முதல்வர் கூறினார்.
