பழநி, பிப். 28: கோவை மாவட்டம், பொள்ளாச்சி வானவராயர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பழநி, தொப்பம்பட்டி வட்டார பகுதிகளில் தங்கி களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி பழநி அருகே கீரனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு கல்லூரி மாணவர்கள் 3 ஜீ கரைசல் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் குறித்து பயிற்சி அளித்தனர்.
மேலும் 3 ஜீ கரைசலை (இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கலவை) கொண்டு மாடித் தோட்டம் மற்றும் இயற்கை விவசாயத்தில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றின் கார தன்மையால் பூச்சிகளை விரட்டும் முறை குறித்து விவசாயிகளிடம் செயல் விளக்கமளித்தனர். இதில் அப்பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
