×

தஞ்சாவூரில் இன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர், பிப்.28: தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. ஊரக மற்றும் நகர்புறங்களை சேர்ந்த ஆண் / பெண் இருபாலரும் தங்களது தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற்றிட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி வளாகத்தில் இன்று(சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் முன்னனி தனியார் துறை நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இம்முகாமில் ஊரக மற்றும் நகர்புறங்களை சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் தங்களது தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப, 18 முதல் 40 வயதிற்குட்பட்ட, 8ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், B.E. பட்ட படிப்பு படித்த நபர்கள் தங்களது சுய விபர குறிப்பு, கல்விச்சான்றிதழ்கள் (அசல் மற்றும் நகல்), ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : grand private sector employment camp and ,skill festival ,Thanjavur district ,Thanjavur ,Priyanka Pankajam ,grand private sector employment ,skill ,Tamil Nadu State Rural and Urban Livelihood Movement ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்