×

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் தர்ணா போராட்டம் துவக்கம்

நாகை, பிப். 9: அரசுத்துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை அவுரி திடலில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் 72 மணிநேர மாலைநேர தர்ணா போராட்டம் துவங்கியது. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, சரவணன் தலைமை வகித்தனர். போராட்டத்தில் பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், ஜிபிஎப் வட்டி குறைப்பு ரத்து ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். 4 லட்சத்து 50 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. 72 மணி நேர மாலை நேர தர்ணா போராட்டம் மாலை நேரத்தில் மட்டும் நடைபெறும். மயிலாடுதுறை: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ-ஜியோவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதுகலை பட்டதாரி கழக மாவட்ட செயலாளர் கலைவாணன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில வெளியீட்டாளர் ஜெக மணிவாசகம், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் லீலாவதி பங்கேற்றனர்.

Tags : Tarna ,struggle ,Jacto Geo Federation ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...