×

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி பழையபாளையத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம், பிப். 9: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி கொள்ளிடம் அருகே பழையபாளையம் கிராமத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையத்தில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் முன்பாக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக மாநில சிறுபான்மை அணி செயலாளர் மஸ்தான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லசேதுரவிக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், முன்னாள் எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், டாக்டர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதைதொடர்ந்து மாநில சிறுபான்மை அணி செயலாளர் மஸ்தான் நிருபர்களிடம் கூறுகையில், பழையாறு முகத்துவாரத்தில் மீனவர்களின் படகுகள் செல்ல வழிவிடாமல் கற்களை கொட்டி இடர்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் இன்றைக்கு டெல்டா மாவட்டம் வறண்டு போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மீனவர் கிராமத்தில் வசித்து வரும் மீனவர்களுக்கு இதுவரை மனை பட்டா கிடைக்கவில்லை என்றார்.

Tags : protests ,DMK ,Palaiyapalayam ,
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்