×

யோகி ஜப்பான் பயணம்: அகிலேஷ் கிண்டல்

 

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 3 நாள் பயணமாக சமீபத்தில் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு, அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். அந்த பயணத்தை தொடர்ந்து நேற்று ஜப்பான் சென்றார். அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். அவரது ஜப்பான் பயணம் பற்றி சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, ‘சிலர் ஜப்பானுக்கு சென்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். ஜப்பானை நிப்பான் என்றும் கூட அழைப்பார்கள்.

நம் நாட்டுக்கு பெயர் மாற்றும் முதல்வர் ஒருவர் வந்திருக்கிறார் என்பதற்காக ஜப்பான் மக்கள் அச்சப்பட மாட்டார்கள் என்றார். மேலும், ஜப்பானை அவர் ஆதித்யாபூர் அல்லது ஆதித்யாபுரம் என பெயர் மாற்றுவார் என்று கிண்டலாக கூறினார். உத்தர பிரதேசத்தில் பல்வேறு நகரங்களின் பெயர்கள் யோகி அரசில் மாற்றப்பட்டு வருகின்றன. அதனை குறிப்பிடும் வகையில் அகிலேஷ் கிண்டலாக கூறியுள்ளார் என கூறப்படுகிறது.

Tags : Yogi ,Japan ,Lucknow ,Uttar Pradesh ,Chief Minister ,Yogi Adityanath ,Singapore ,
× RELATED சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 10...