×

வருசநாடு பகுதியில் போதிய பஸ் வசதியின்றி மலைக்கிராம மக்கள் அவதி

வருசநாடு, பிப். 9: வருசநாடு பகுதியில் போதிய பஸ் வசதியின்றி மலைக்கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு கிராமத்தை சுற்றி 150க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் தேவைகளுக்காக வருசநாட்டுக்கு வந்து செல்கின்றனர். மேலும், வெளியூர்களுக்கு செல்ல, மலைக்கிராம மக்கள் வருசநாடு கிராமத்திற்கு நீண்ட தூரம் நடந்து வந்து, அங்குள்ள பஸ்நிலையத்தில் இருந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். இதனால், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இப்பகுதியில் பஸ் சேவையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வெளியூர்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூறுகையில், ‘மலைக்கிராமங்களான எங்கள் பகுதியில் பஸ் சேவை மிகவும் குறைவாக உள்ளது. 45 நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பஸ் இயக்குவதாக தெரிவித்தார்கள். ஆனால், சில நேரங்களில் பஸ் சுத்தமாக வருவதில்லை. இதனால், மிகவும் சிரமப்படுகிறோம். மாலையில் பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, வருசநாடு பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Hill ,bus facilities ,area ,Varusanadu ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை