×

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 300 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 1,000 கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 700 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணைக்கு 3வது நாளாக நேற்றும் 38 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 88.21 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 50.63 டிஎம்சியாக உள்ளது.

Tags : Okenakkal ,Mettur ,Okenakkal Cauvery ,Mettur dam ,
× RELATED தொகுதி கேட்கலயா? பாஜவை விளாசும் பாமக