தேவையான பொருட்கள்:
*முட்டை – 2
*கடலை மாவு – 1/12 டேபிள் ஸ்பூன்
*வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
*இஞ்சி – 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
*பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
*உப்பு – சுவைக்கேற்ப
*பேக்கிங் பவுடர் – 2 சிட்டிகை
*எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
*மிளகாய் தூள் – சிறிது
*மிளகுத் தூள் – சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கட்டிகளின்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
*பின்னர் ஒரு தட்டையான பேனை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஒரு கரண்டியில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் ஆங்காங்கு ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து முட்டை கலவையையும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அந்த பொரித்த முட்டையுடன் சிறிது மிளகுத் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு குலுக்கினால், சுவையான முட்டை பக்கோடா தயார்.
