×

சின்ன வெங்காய கறிவேப்பிலை துவையல் ரெசிபி

தேவையான பொருட்கள்:

*நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
*பூண்டு-6-8
*சரகம் – 1 டீஸ்பூன்
*புளி – நெல்லிக்காய் அளவு
*சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி
*மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
*மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
*கறிவேப்பிலை – 2 கைப்பிடி
*உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

*முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

*எண்ணெய் சூடானதும், அதில் சீரகத்தை சேர்த்து தாளித்து, பின் பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்

*அடுத்து அதில் நெல்லிக்காய் அளவு புளி மற்றும் 2 கைப்பிடி சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்

*பின்பு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

*பிறகு அதில் 2 கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து சுவைக்கேற்ப உப்பு தூவி, கறிவேப்பிலை கருங்க வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

*இறுதியாக வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீரை ஊற்றாமல் நன்கு அரைத்து எடுத்தால் சுவையான சின்ன வெங்காய கறிவேப்பிலை துவையல் தயார்.

Tags :
× RELATED சைவ முட்டைக் குழம்பு