×

விபசார புரோக்கர் கைது

கோவை, பிப். 25: கோவை ராமநாதபுரம் அகஸ்தியன்பேட்டையில் உள்ள ஒரு வீட்டுக்கு அடிக்கடி, சில ஆண்கள் வந்து சென்றனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது, வாடகைக்கு வீடு எடுத்து வெளியூரில் இருந்து பெண்களை வரவழைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விபசார புரோக்கரான பொள்ளாச்சியை சேர்ந்த சிவக்குமார் (43) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags : Coimbatore ,Agasthyanpet, Ramanathapuram, Coimbatore ,Ramanathapuram ,station ,
× RELATED 37 இரு சக்கர வாகனம் மீட்பு