×

37 இரு சக்கர வாகனம் மீட்பு

கோவை. பிப். 25: கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் பல்வேறு இடங்களில் நீண்ட நாட்களாக நின்றிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர். இதன் உரிமையாளர்கள் யார் என்று தெரியவில்லை. கோவை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உதவியுடன் அதன் உரிமையாளர்களை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இருசக்கர வாகனங்கள் எங்கேயாவது திருடப்பட்டதா? அதன் உரிமையாளர்கள் யார்? என்று வாகன பதிவெண் மற்றும் என்ஜின் சேஸ் எண் உதவியுடன் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags : Coimbatore ,R.S. Puram ,Coimbatore Regional Transport Officers ,
× RELATED விபசார புரோக்கர் கைது