×

பாஜவின் காலடியில் கிடக்கும் இபிஎஸ் மக்களுக்கு கருணை தொகை கொடுக்க போகிறாராம்: திமுக மாணவர் அணி செயலாளர் கடும் தாக்கு

சென்னை: பாஜவின் கால்களை பிடித்து கருணை அடிப்படையில் கட்சி நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கருணைத் தொகை கொடுக்கப் போகின்றாராம் என்று திமுக மாணவர் அணி செயலாளர் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது:பாஜவின் கால்களைப் பிடித்து கருணை அடிப்படையில் கட்சி நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கருணைத் தொகை கொடுக்கப் போகின்றாராம். மிஸ்டர் எடப்பாடி உங்களிடம் கருணை வாங்க நீங்கள் ஒன்றும் மக்களுக்கான எஜமானன் இல்லை. பாஜவின் தயவில் உயிர் வாழும் அடிமை நீங்க. உங்களுக்குப் பிடித்திருக்கும் இந்த ஆணவத் திமிருக்கு சுயமரியாதை உணர்வு கொண்ட தமிழ்நாட்டு மக்கள் இந்த தேர்தலிலும் மருந்து கொடுப்பார்கள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : EPS ,BJP ,DMK Student Union ,Chennai ,Edappadi Palaniswami ,Rajiv Gandhi… ,
× RELATED முதல்வரின் சிறப்பான ஆட்சியால்...