தேவையானவை:
வாழைப்பூ – 2 கப்
மஞ்சள் பொடி- சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு- அரை டீஸ்பூன்
மிளகாய் வத்தல்- 5
புளி- சிறிதளவு
உப்பு- சுவைக்கு ஏற்ப
தேங்காய் – சிறிதளவு
செய்முறை:
*வாழைப் பூ துவையல் செய்வதற்க முதலில் பூவில் உள்ள நரம்புகளையெல்லாம் தனியாக பிரித்தெடுத்துக்கொண்டு தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.
* இதையடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிதளவு உப்பு, மஞ்சள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
*பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு, மிளகாய் வத்தல், புளி போன்றவற்றை லேசாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் வாழைப்பூவை சேர்த்து வதக்கவும்.
*உளுந்தம் பருப்பு, வாழைப்பூ ஆறியவுடன் கலவையை மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் சுவைக்கு ஏற்ப சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்தால் போதும். சுவையான வாழைப்பூ துவையல் ரெடி.
