×

பெரம்பலூரில் பரபரப்பு சசிக்கலாவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

பெரம்பலூர்,பிப்.8: சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று (8ம் தேதி) தமிழகம் வருகை தர உள்ளார். அவருக்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக அதிமுக கட்சியில் மறைமுகமாகவும், நேரடியாகவும் கட்சி நிர்வாகிகள் பலர் ஆதரவு குரல்எழுப்பி வருகின்றனர். சசிகலாவை வரவேற்று அந்தந்தப் பகுதிகளில் வரவேற்பு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர் நகரெங்கும் ஒட்டப்பட்டிருந்த சசிக்கலா வரவேற்பு போஸ்டர் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்ட அதிமுகவில், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளராக பதவி வகித்து வரும் ராஜாராம் என்பவரது பெயர் மற்றும் புகைப்படத்துடன் சசிக்கலாவை வரவேற்று பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என ராஜாராம் இதர அதிமுக நிர்வாகிகளிடமும், காவல் துறையினரிடமும், தெரிவித்து வருகிறார். யாரோ மர்மநபர்கள் எனது பெயரையும் புகைப்படத்தையும் அதிமுக கட்சி பதவியையும் அச்சடித்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர். இச்செயலை நான் வன்மை யாக கண்டிக்கின்றேன் என தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் சென்று, பெயரில் போஸ்டர் ஒட்டியவர், அச்சடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் மனு அளித்துள்ளார்.

Tags : Sasikala ,Perambalur ,
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...